உள்ளூர் செய்திகள்
முருகனுக்கு பாலாபிஷேகம்

எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பாலாபிஷேகம்

Published On 2022-04-17 09:52 GMT   |   Update On 2022-04-17 09:52 GMT
எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்றசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய விழாவான சித்திரா பவுர்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து நடைபயணமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலமாக இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் சுமார் 250 போலீசார் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டது. 

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து சுமார் 25&க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News