தொழில்நுட்பம்
கேமிங் ஸ்மார்ட்போன்

கேமிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் குவால்காம்

Published On 2020-10-08 11:08 GMT   |   Update On 2020-10-08 11:08 GMT
குவால்காம் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


குவால்காம் நிறுவனம் டிசம்பர் மாத வாக்கில் ஸ்னாப்டிராகன் 875 சீரிஸ் பிராசஸர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாகி இருக்கிறது. 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் குவால்காம் நிறுவனம் பிரத்யேக கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பும் டிசம்பர் மாத நிகழ்விலேயே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்க குவால்காம் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 

குவால்காம் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கூலிங் மெக்கானிசம், பெரிய பேட்டரி, கஸ்டம் கண்ட்ரோல் மற்றும் இதக வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News