செய்திகள்
கரூர் எம்.பி. ஜோதிமணி

குஜிலியம்பாறை அருகே கரூர் எம்.பி. ஜோதிமணி, அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

Published On 2020-10-18 07:16 GMT   |   Update On 2020-10-18 07:16 GMT
குஜிலியம்பாறை அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைவது தொடர்பாக கரூர் எம்.பி. ஜோதிமணிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை சீலக்கரட்டு மலைப்பகுதியில் சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் சிட்கோ தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்காக வருவாய்த்துறையிடம் இருந்து சிட்கோ நிறுவனம், 56 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு வாங்கியது. இதையடுத்து சிட்கோ தொழிற்பேட்டை அமைவதற்கான பாதைகள் அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக தற்போது நடந்து வருகிறது. ஆனால் மலைப்பகுதியில் சிட்கோ அமைக்கப்படுவதால் இயற்கை வளங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் சிட்கோ தொழிற்பேட்டை அமையவிருக்கும் இடத்தை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் கரூர் எம்.பி. ஜோதிமணி நேற்று சீலக்கரட்டிற்கு வந்தார். அதே நேரத்தில் குஜிலியம்பாறை அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆர்.கோம்பை ஊராட்சி மன்ற தலைவருமான மலர்வண்ணன், தனது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு வந்தார். அப்போது சிப்காட் தொழிற்பேட்டை அமைவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News