தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சலுகை

Published On 2020-06-05 09:43 GMT   |   Update On 2020-06-05 09:43 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகையுன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு தனது சலுகைகளுடன் வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  சந்தாவினை விரைவில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுபோன்ற சலுகையினை அறிவித்து வழங்கி இருக்கிறது.

எனினும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு பெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான தரவுகளை பார்க்க முடியும்.



இத்துடன் ஹாட்ஸ்டாரில் பிரத்யேக நேரலையில் கிரிகெட், பிரீமியர் லீக் மற்றும் ஃபார்முலா 1 உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசிக்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. எனினும், இது குறிப்பிட்ட சலுகைகளுக்கு மட்டும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

புதிய சலுகை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஜியோ டீசரில் இந்த சலுகை விரைவில் வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 401 விலையில் பிரீபெயிட் சலுகையை ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வழங்கியது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News