செய்திகள்
கோப்புபடம்.

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம் - காங்கயம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு

Published On 2021-10-11 06:38 GMT   |   Update On 2021-10-11 06:38 GMT
காங்கயம் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காங்கயம்:

தமிழக அரசின் நமக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் தனியார்நிறுவனங்களுக்கு காங்கயம் நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எம்.முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கயம் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூங்கா அபிவிருத்திப் பணிகள், விளையாட்டுத் திடல், தெருவிளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, மாதிரி நூலகம் கட்டுதல், மழைநீர் வடிகால் கட்டுதல், சாலைகள் மேம்படுத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பராமரிக்கும் பணிகள் அரசு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் இத்திட்டப்பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டில் 3ல் 2 பங்கு அரசின் பங்களிப்புடனும், ஒரு பங்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட உள்ளது. 

எனவே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிபுரிய விரும்பும் பொதுமக்கள் தொழில் நிறுவனத்தினர் இதற்கான கோரிக்கை மனுக்களை ஆணையர், காங்கயம் நகராட்சி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News