தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் இன்வைட் சேர்க்கும் வசதி அறிமுகம்

Published On 2019-03-03 07:43 GMT   |   Update On 2019-03-03 07:43 GMT
ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை ஸ்டோரிக்களில் சேர்க்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. #Facebook



ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஸ்டோரிஸ் அம்சத்தில் புதிய வசதியை சேர்த்திருக்கிறது. புதிய அம்சம் கொண்டு இனி ஸ்டோரிக்களிலும் விழா அழைப்பிதழ்களை சேர்க்கலாம். இதன் மூலம் அதிகப்படியான ஃபேஸ்புக் நண்பர்கள், உறவினர்களை விழாக்களுக்கு அழைக்க முடியும்.

ஸ்டோரிக்களில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை க்ளிக் செய்து ஷேர் பட்டனை தேர்வு செய்ய வேண்டும். விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல், இனி ஷேர் டு யுவர் ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம் தெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம். 



இதுதவிர விழாவை நண்பர்கள் மறக்காமல் இருக்க நினைவூட்டும் வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. க்ளிக் செய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினம் விரைவில் கொண்டாடப்பட இகருக்கும் நிலையில், இந்த அம்சம் சர்வதேச அளவில் வெளியிட சரியான நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச மகிளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பிரத்யேக ஃபேஸ்புக் ஸ்டிக்கர்களை உருவாக்க ஃபேஸ்புக் வடிவமைப்பாளர் கெனெஷா ஸ்னீட்டுன் இணைந்திருக்கிறது.
Tags:    

Similar News