லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்?

Published On 2020-02-22 03:56 GMT   |   Update On 2020-02-22 03:56 GMT
ர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.
கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு சந்தோஷமான தருணம் மட்டுமல்ல. ஏகப்பட்ட உடல் நல பிரச்சனைகளையும் அவர்கள் தாண்டி வர வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.

கர்ப்ப காலத்தில் இது தான் எல்லை என்று எதையும் உங்களால் வரையறுக்க முடியாது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் மனநிலையில் மாற்றம், உடல்நிலையில் மாற்றம் ஏற்படலாம். அதில் ஒன்று தான் தூக்க பிரச்சனை. தற்போதைய ஆய்வுகளின் படி 80% க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு முறையாவது தூக்கக் கோளாறுகளை சந்திக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.

இப்படி கர்ப்ப காலத்தில் தூங்காமல் இருப்பது அவர்களுக்கு சில சமயங்களில் வெறுப்பை கூட ஏற்படுத்தும். இந்த தூக்க கோளாறுகள் மட்டுமல்லாமல் ஹார்மோன் மாற்றங்களாலும் பல கர்ப்ப கால பிரச்சனைகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி கர்ப்ப காலத்தில் தூக்கம் வராமல் இருக்க எது காரணமாக இருக்கின்றன. இதை எப்படி சமாளிக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

கர்ப்ப காலத்தின் கடைசி மாதத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவு கூட அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் இரவில் சரியாக தூங்க இயலாது.

குழந்தை வயிற்றுக்குள் கை, கால்களை அசைக்கும் போதெல்லாம் உங்களுக்கு முழிப்பு தட்ட வாய்ப்புள்ளது. மறுபடியும் தூக்க நிலைக்கு சென்று தூங்குவது கடினமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகள் இருக்கும். பிரசவம் குறித்த பயமே அதை பற்றி கவலைப்பட வைத்து விடும். இந்த மன அழுத்தங்கள் உங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

கர்ப்ப கால பெண்களுக்கு நான்காவது மாதத்தில் இருந்து இரவில் கால் உளைச்சல் அதிகமாக இருக்கும். இதனாலும் அவர்களால் இரவில் சரிவர தூங்க இயலாது. இதற்கு பெண்கள் மக்னீசியம், கால்சியம் அதிகமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது. கால்களுக்கு மசாஜ் செய்து விடலாம். வேண்டுமென்றால் கால்களுக்கு செளகரியமாக தலையணைகளை வைத்து தூங்கலாம்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொதுவான விஷயம். ஆனால் இரவு தூக்க நேரங்களில் அடிக்கடி எழுந்திருத்து சிறுநீர் கழிக்க செல்வதால் தூக்கம் கெடுகிறது. இதனால் அவர்கள் இன்ஸோமினியா பிரச்சனையை சந்திக்கின்றனர். கடைசி மாதத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தை அடிக்கடி உதைக்கும். இதனாலும் இரவு நேரங்களில் சரிவர தூங்க இயலாது. மேலும் தூங்குவதற்கு சரியான நிலையை கண்டறிவது சிரமமாக இருக்கும். தூங்கும் நிலை குறித்து எழும் சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

சில சமயங்களில் இரவில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு கூட தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கும்.

இரவில் ரெம்ப நேரம் கழித்து காபி எடுத்துக் கொள்வது சரி கிடையாது. அது உங்கள் தூக்கத்தை கெடுக்க கூடியது. உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் அது சிறந்தது அல்ல. எனவே இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். காபியை தவிருங்கள். வித்தியாசமான கனவுகள் வரக் கூடும் சில பெண்களுக்கு இரவில் வித்தியாசமான கனவுகள் வரக் கூடும்.

இதனாலும் அவர்கள் இரவில் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான கனவுகள் வருவதற்கு உங்கள் பிரசவம் குறித்த பயமும், எதிர்கால கவலைகளும் தான் காரணம். எனவே எதையும் பற்றி யோசிக்காமல் உங்கள் நலனையும் குழந்தையின் நலனை மட்டும் யோசிக்கவும்.
Tags:    

Similar News