செய்திகள்
கோப்புபடம்

துறைமுகம், தாராபுரம், நெல்லை, ஊட்டி, நாகர்கோவில் 5 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை

Published On 2021-05-02 09:44 GMT   |   Update On 2021-05-02 09:44 GMT
நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி முன்னிலையில் உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி முன்னிலையில் உள்ளார்.

காலை 11.30 மணி நிலவரப்படி எம்.ஆர்.காந்தி (பா.ஜனதா) 18,777 வாக்குகளும், சுரேஷ்ராஜன் (தி.மு.க.) 13,854 வாக்குகளும் பெற்றிருந்தனர். வித்தியாசம் 4,923.

திருநெல்வேலியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும், தி.மு.க. சார்பில் ஏ.எல்.எஸ்.லெட்சுமணனும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணத் தொடங்கியது முதல் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார்.

பகல் 12 மணி நிலவரப்படி நயினார் நாகேந்திரன் 13,239 ஓட்டுகளும் ஏ.எல்எஸ்.லெட்சுமணன் 8815 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். ஓட்டு வித்தியாசம் 4,424.

பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழியைவிட சுமார் 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். எல்.முருகன் 15,186, கயல்விழி-13,624.


உதகமண்டலம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போஜராஜன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கணேசை விட சுமார் 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். போஜராஜன் (பா.ஜனதா) - 25,633, கணேஷ் (காங்கிரஸ்) - 18,229.

Tags:    

Similar News