தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் குரோம்

திடீரென இந்த சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்த கூகுள்- இனி இண்டர்நெட் டேட்டா செலவிடுதல் அதிகமாகும்?

Published On 2022-02-25 11:55 GMT   |   Update On 2022-02-25 12:05 GMT
இந்த அம்சம் டேட்டா அதிகம் செலவாவதை தடுக்கவும், இணைய பக்கங்கள் வேகமாக செயல்படவும் உதவியது.
கூகுள் நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மொபைல் பயனர்களுக்கு டேட்டாவை சேமிக்கும் வகையில் குரோம் செயலியில் ‘லைட் மோட்’ என்ற சேவையை வழங்கி வந்தது. இந்த சேவை, இணைய பக்கங்களை கம்ப்ரஸ் செய்து வேகமாக செயல்பட உதவியது. மேலும் தேவையில்லாத இடங்களில் டேட்டாவை குறைத்து அதிகம் செலவாகாமல் தடுத்தது.

2015-ம் ஆண்டு இந்த லைட் சேவையில் டேட்டாவை குறைப்பதற்கு புகைப்படங்களை பிளாக் செய்யும் அம்சத்தையும் கூகுள் கொண்டு வந்தது. இதுவும் பயனர்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் தற்போது இந்த லைட் மோட் அம்சத்தை நீக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 



இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது:-

முன்பு டேட்டாக்கள் குறைந்த அளவிலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வந்தன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்காக லைட் மோட் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிலும் குறைந்த விலையில் டேட்டாக்கள் கிடைக்கின்றன. 

மேலும் அனைத்து நிறுவனங்களும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்கான தேவை இல்லாததால் லைட் மோட் அம்சத்தை நீக்க முடிவு செய்துள்ளோம்.

லைட்மோட் நீக்கப்பட்டாலும் போதுமான டேட்டாவில் வேகமாக இணையதளங்களை பயன்படுத்துவதற்கு குரோம் செயலி உதவும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News