வழிபாடு
கும்பகோணம் மகாமக குளத்தை தூய்மை செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தை சுத்தம் செய்யும் பணி

Published On 2022-02-15 03:24 GMT   |   Update On 2022-02-15 03:24 GMT
மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வருகிற 17-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கொண்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாசி மக விழா கடந்த 8-ந்தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வருகிற 17-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி மகாமக குளக்கரையில் சாமிகளை கொண்டுவந்து நிறுத்துவதற்கு வசதியாக அந்தந்த கோவில்கள் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் தீர்த்தவாரி மண்டபம் பகுதியில் உள்ள படிக்கட்டுகள் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
Tags:    

Similar News