செய்திகள்
கேரள மாநில உயர்நீதிமன்றம்

மே 2-ந்தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது: கேரள மாநில உயர்நீதிமன்றம்

Published On 2021-04-27 11:01 GMT   |   Update On 2021-04-27 11:37 GMT
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந்தேதி வெற்றிகளை கொண்டாடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் நாளைமறுதினம் நடக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 2-ந்தேதி (வருகிற ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் குவிய வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் அன்றைய தினம், கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படட்டது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. போதுமான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம், மாநில அரசுகள் செய்யும். லாக்டவுன் தேவையில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News