செய்திகள்
அகமது படேல் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்

அகமது படேல் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்- இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்பு

Published On 2020-11-26 08:28 GMT   |   Update On 2020-11-26 08:28 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் உடல், குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பரூச்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71) காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.  

இதையடுத்து அவரது உடல் நேற்று இரவு, குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பிராமன் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 

அதன்பின்னர் அகமது படேல் உடல் இஸ்லாமியர்களின் கல்லறைத் தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா, மாநில பொறுப்பாளர் ராஜீவ் சதவ், மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் முதல்வர்கள் கமல் நாத், சங்கர்சின் வகேலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News