செய்திகள்
பிஆர் பாண்டியன் பேசிய போது எடுத்த படம்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- பிஆர் பாண்டியன்

Published On 2021-01-10 05:17 GMT   |   Update On 2021-01-10 05:17 GMT
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் சீர்காழிக்கு வந்தது. அப்போது தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளின் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயத்தை பாதிக்கும் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழக அரசு உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் முருகன் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்தி் கொள்ள வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

அப்போது விவசாய சங்க தலைவர்கள் விசுவநாதன், சிவப்பிரகாசம், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News