ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்

பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-09-30 08:10 GMT   |   Update On 2020-09-30 08:10 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அக்டபோர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

இரு மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கியது. இதுதவிர ஜி 310 சீரிசுக்கு மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை விவரங்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.



முந்தைய பிஎஸ்4 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் 313சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இவற்றின் செயல்திறன் அளவுகள் பிஎஸ்4 மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது. 

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News