செய்திகள்
பணியிடை நீக்கம்

ஏரியில் பட்டாசு வெடித்த விவகாரம்- சுற்றுலா வளர்ச்சி கழக படகு ஓட்டுனர்கள் பணியிடை நீக்கம்

Published On 2021-02-19 09:51 GMT   |   Update On 2021-02-19 09:51 GMT
ஏரியில் பட்டாசு வெடித்த விவகாரம் தொடர்பாக படகை ஓட்டிச்சென்ற சுற்றுலா வளர்ச்சி கழக தற்காலிக ஓட்டுனர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையபகுதியில் நட்சத்திர ஏரி உள்ளது. கடந்த 15-ந்தேதி கொடைக்கானலுக்கு திருமண விழாவிற்கு வந்தவர்கள் இந்த நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகுகளை வாடகைக்கு எடுத்து சவாரி செய்தனர். அப்போது அவர்கள் ஏரியில் பட்டாசுகளை வெடித்தனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. எனவே இதுபற்றி விசாரணை நடத்துமாறு சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர் விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர், ஏரியில் படகை ஓட்டிச்சென்ற சுற்றுலா வளர்ச்சி கழக தற்காலிக ஓட்டுனர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், படகுகளிலும், படகு குழாம்களிலும் பட்டாசு அபாயம் குறித்த எச்சரிக்கை விளம்பரங்கள் ஒட்டப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News