செய்திகள்
தமிழ்நாடு மின்சார வாரியம்

பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்

Published On 2021-06-09 05:06 GMT   |   Update On 2021-06-09 05:06 GMT
மின்கம்பம் ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணிகளை காய வைப்பது மற்றும் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
விழுப்புரம்:

விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குமாரசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மின் விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பழுது தொடர்பான புகார்களை மின்தடை நீக்கும் மையத்தை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் அல்லது 94458 55768 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

மேலும் அறுந்து தரையில் கிடக்கும் மேல்நிலை மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். விவசாயிகள் தங்கள் நிலத்தில் மின்வேலி அமைப்பதால், பொதுமக்கள் மற்றும் விலங்குகள் மின் விபத்துக்குள்ளாகின்றன. ஆகவே விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க வேண்டாம். மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அதை மீறும்பட்சத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்கம்பம் ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணிகளை காய வைப்பது மற்றும் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மின்பாதைகளுக்கு அடியிலோ, மின்மாற்றிகளுக்கு அருகிலோ கனரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News