செய்திகள்
சிறப்பு ரெயில்

16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே

Published On 2021-04-24 04:20 GMT   |   Update On 2021-04-24 08:10 GMT
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயில் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவை நாளை குறைக்கப்பட்டுள்ளது.



இது தவிர 16 பயணிகள் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயில் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர், திருச்சி- காரைக்கால், விழுப்புரம்-மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் ரெயில்கள் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யக்கூடிய சிறப்பு ரெயில்களாக இதுவரையில் இயக்கப்பட்டு வந்தது.

கொல்லம்-ஆழப்புழா, ஆழப்புழா-கொல்லம், எர்ணாகுளம்-ஆழப்புழா, ஆழப்புழா-எர்ணாகுளம், அரக்கோணம், ஜோலார்பேட்டை-காட்பாடி, காட்பாடி-ஜோலார்பேட்டை உள்ளிட்ட 16 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News