செய்திகள்
மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்

ரெயில்வேயில் 4 ஆயிரம் ‘கலாசி’ பணியாளர்கள் - பாராளுமன்றத்தில் ரெயில்வே மந்திரி தகவல்

Published On 2020-09-21 20:10 GMT   |   Update On 2020-09-21 20:10 GMT
நாடு முழுவதும் இன்றைய தேதிக்கு இந்திய ரெயில்வே துறையில் 4,227 ‘கலாசி‘ பணியாளர்கள் பணியில் உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
புதுடெல்லி:

ரெயில்வே உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்ப்பதற்காக நியமிக்கப்படுவோர் ‘கலாசி‘ அல்லது ‘பங்களா பியூன்‘ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே ‘கலாசி‘ முறையில் வேலையாட்கள் நியமிக்கப்படுவது பின்பற்றப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையில் குரூப் டி பிரிவில் இந்த நியமனம் வருகிறது.

உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் போது அந்த பணியாளர்களை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மோசமாக நடத்துவதாக புகார்கள் எழுந்தன. ‘கலாசி‘ முறை தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும், எனவே புதிதாக நியமனம் மற்றும் அல்லது மாற்று நபர் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ரெயில்வே துறை கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் இன்றைய தேதிக்கு இந்திய ரெயில்வே துறையில் 4,227 ‘கலாசி‘ பணியாளர்கள் பணியில் உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் அத்துமீறுவது அல்லது மோசமாக நடத்தப்பட்டதாக எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணிமுறையை தொடர்வதா அல்லது முடிவுக்கு கொண்டுவருவதா என்பது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News