செய்திகள்
கோப்புப்படம்

ஹரியானாவில் 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24-ம் தேதி முதல் திறப்பு

Published On 2021-02-22 14:19 GMT   |   Update On 2021-02-22 14:19 GMT
ஒருபக்கம் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்குமோ என் அச்சம் நிலவி வரும் நிலையில், ஹரயானாவில் 24-ந்தேதி முதல் தொடக்கப்பள்ளி வகுப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, மராட்டியம் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.  நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 74 சதவீதம் மேற்கூறிய மாநிலங்களில் ஏற்படுபவைதான். எனினும் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால், தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களை உஷார்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 24-ம்தேதி முதல் 3-ம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு துவக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News