செய்திகள்
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

சம்பளம் அளிக்க நிதி தாருங்கள் - மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

Published On 2020-10-28 00:17 GMT   |   Update On 2020-10-28 00:17 GMT
ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சம்பளம் அளிக்க டெல்லி மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுடெல்லி:

வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த டாக்டர்கள் 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து நேற்று ஒரு நிகழ்ச்சியில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

மாநகராட்சி டாக்டர்கள், போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது வெட்கக்கேடானது. நாடு முழுவதும் மாநகராட்சிகளுக்கு மானியம் வழங்கும் மத்திய அரசு, டெல்லி மாநகராட்சிகளுக்கு மட்டும் வழங்கவில்லை. இதில் அரசியல் கூடாது. ஆகவே, உடனடியாக டெல்லி மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அதன்மூலம் டாக்டர்களுக்கு சம்பள பாக்கி கிடைக்கும். அத்துடன், மாநகராட்சிகளில் நடக்கும் ஊழல்களை களைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News