செய்திகள்
கொரோனா வைரஸ்

உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி ஆசிரியர்கள்- 4 மாணவிகளுக்கு கொரோனா

Published On 2021-09-20 09:00 GMT   |   Update On 2021-09-20 09:00 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை:

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அளித்து அரசு உத்தவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. பள்ளி வகுப்பறைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.

இருப்பினும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பள்ளி மாணவிகள் 4 பேருக்கும், ஆசிரியர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

Similar News