செய்திகள்
விபத்து நடந்த குடோன்

பெங்களூரு பட்டாசு குடோனில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு

Published On 2021-09-23 10:47 GMT   |   Update On 2021-09-23 11:30 GMT
பட்டாசுகளை கையாளும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பெங்களூரு துணை கமிஷனர் ஹரிஷ் பாண்டே தெரிவித்தார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு, நியூ தரகுபேட்டை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுபற்றி பெங்களூரு (தெற்கு) துணை கமிஷனர் ஹரிஷ் பாண்டே கூறுகையில், ‘சுமார் 80 பட்டாசு பெட்டிகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எத்தனை வெடித்தன என்பதை சரிபார்க்க வேண்டும். இது பட்டாசுகளை கையாளும்போது ஏற்பட்ட விபத்து போன்று தெரிகிறது. தடயவியல் நிபுணர் குழு தடயங்களை சேகரித்து அளிக்கும் தகவலைத் தொடர்ந்து விபத்துக்கான காரணம் தெரியவரும்” என்றார்.

பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோன், போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமானது. போக்குவரத்து நிறுவன குடோனில் வெடிபொருட்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் துணை கமிஷனர் தெரிவித்தார்.
Tags:    

Similar News