ஆன்மிகம்
கபாலீசுவரர் கோவிலில் பன்னிரு திருமுறை விழா

கபாலீசுவரர் கோவிலில் பன்னிரு திருமுறை விழா

Published On 2021-08-24 04:52 GMT   |   Update On 2021-08-24 04:52 GMT
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பன்னிருதிருமுறைகள் விழாவை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம் மற்றும் 12 திருமுறைகள் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பன்னிருதிருமுறைகள் விழா ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி விழா தொடங்கியது. விழாவில் நடராஜர் அபிஷேகம் மற்றும் 12 திருமுறைகள் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நிறைவு நாளான நேற்று அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யானை வாகனத்தில் பன்னிரு திருமுறைகள் கோவிலை சுற்றி வலம் வரும் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.

மேலும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தின் அருகில் பூணூல் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி  நடந்தது. தெப்பக்குளத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால், அதன் அருகில் கணபதி பூஜை செய்து திரளானவர்கள் பூணூலை மாற்றிக்கொண்டனர். மேலும் சென்னை தியாகராயநகரில் திருமண மண்டபத்தில் ஒன்றிலும் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News