லைஃப்ஸ்டைல்
கால்களை வலிமையாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி

கால்களை வலிமையாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி

Published On 2019-11-27 03:17 GMT   |   Update On 2019-11-27 03:17 GMT
இந்த பயிற்சி செய்வதால் கால் மற்றும் பின்புற தசைகள் வலுவடைவதால், அதிகப்படியான தசைகளை குறைக்க முடியும். உடலின் எடையை கால்கள் தாங்கிக் கொள்வதால் கால்கள் வலுவடைகின்றன.
எப்போதும் செய்யும் புஷ்-அப் பயிற்சிகளை கெட்டில்பெல் வைத்து செய்யவேண்டும். சாதாரணமாக தரையில் கைகளை ஊன்றி செய்வதைவிட கெட்டில்பெல்லின் உதவியோடு புஷ்-அப் செய்வதால் நல்ல க்ரிப் கிடைக்கும். படத்தில் காட்டியபடி, விரிப்பில் கெட்டில்பெல்களை இரண்டு பக்கமும் மார்பிற்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு அதன் பிடிகளைப் பிடித்தவாறே, மெதுவாக முடிந்த மட்டும் உடலை மட்டும் தரையிலிருந்து சற்றே உயர்த்த வேண்டும்.

கால்களைப் பின்னோக்கி தரையிலும், கைகள் இரண்டையும் தோள்பட்டைக்கு நேராக கெட்டில்பெல்லை பிடித்தவாறு நன்றாக ஊன்றிக்கொண்டு, மேல் உடலை உயர்த்த வேண்டும்.. இதை 10 முதல் 15 முறை திரும்ப செய்ய வேண்டும்.

பலன்கள்

புஷ்-அப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலின் ஒவ்வொரு பகுதியும் வேலை செய்கிறது. நிலத்திலிருந்து எம்பி, புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதால் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. மார்பு விரிவடைகிறது. கைகள் மற்றும் அடிவயிற்று தசைகள் இறுக்கமடைகின்றன. கால் மற்றும் பின்புற தசைகள் வலுவடைவதால், அதிகப்படியான தசைகளை குறைக்க முடியும். உடலின் எடையை கால்கள் தாங்கிக் கொள்வதால் கால்கள் வலுவடைகின்றன. முழங்கால் இணைப்புகள் வலுப்பெற்று பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியைக் குறைக்க முடியும்.
Tags:    

Similar News