ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாசாமி ஊர்வலத்திற்கான திருக்குடைகள் ஒப்படைப்பு

அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா: சாமி ஊர்வலத்திற்கான திருக்குடைகள் ஒப்படைப்பு

Published On 2020-11-19 07:17 GMT   |   Update On 2020-11-19 07:17 GMT
அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலத்திற்கான 3 திருக்குடைகள் மேளதாளம் முழங்க சடைசுவாமி ஆசிரம நிர்வாகி திருபாத சுவாமிகள் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர்.
வேலூர் அண்ணாமலையார் திருக்குடை சமதி மற்றும் ஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்பாதனம் சார்பில் 2-வது ஆண்டாக திருக்குடை வைபோக விழா நேற்று நடத்தப்பட்டது. இதையொட்டி தலா ரூ.13 ஆயிரம் செலவில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு ஒரு குடையும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு 3 குடைகளும் வழங்கப்பட்டது.

வேலூரிலிருந்து 3 வேன்களில் திருக்குடைகளை ஏற்றி வந்த அண்ணாமலையார் திருக்குடை சமதியினர் நேற்று பிற்பகல் மேளதாளம் முழங்க சடைசுவாமி ஆசிரம நிர்வாகி திருபாத சுவாமிகள் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர். இந்த குடைகளை கோவில் கண்காணிப்பாளர் வேதமூர்த்தி, மணியக்காரர் செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அண்ணாமலையார் திருக்குடை சமதியின் நிறுவனத் தலைவர் சிவபிரத்யேங்கரா சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News