உள்ளூர் செய்திகள்
விழாவில் முதல்அமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் பேசியபோது எடுத்தபடம்.

தமிழ் படித்த இளைஞர்கள் சாதனை படைப்பார்கள்

Published On 2022-04-17 09:17 GMT   |   Update On 2022-04-17 09:17 GMT
தமிழ் படித்த இளைஞர்கள் மிகப்பெரிய சாதனை புரிவர் என்றார் தமிழக முதல்வரின் முதன்மை செயலர் த.உதயச்-சந்திரன் ஐ.ஏ.எஸ். கூறினார்.
திருச்சி:

திருச்சியில் களம் அமைப்பு சார்பில் நடந்த ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வரின் முதன்மை செயலர் த.உதயச்-சந்திரன் உத-யச்சந்திரன் பேசிய-தாவது:

தமிழிலக்கியம் படித்த ஒருவர் குடிமைப்பணிக்குத் தேர்வு பெற்று உலகம் முழு-வதும் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால் தமிழ் படிக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும். தமிழுக்கு எதிராகப் பேசக்கூடியவர்கள் மத்தியில் தமிழ் படித்தால் வெல்ல முடியும் என்பதே ஒரே பதில்.

பழங்குடியின மக்களை முன்னிறுத்தும் வகையில் நூல்-களை எழுதியவர் பால-கிருஷ்ணன். மாற்றி யோசிக்க வைக்கும் ஆளுமை கொண்-டவர் அவர். நவீன இலக்கியங்களில் ஹைக்கூ எழுதி கருத்துப்பரி-மாற்றம் செய்பவர். சங்க இலக்கியங்கள் அனைத்திலும் வல்லமை படைத்தவர்.

பத்திரிக்கையாளர் களுக்-கும் எனக்கும் இடையே நெருங்கிய பந்தம் உண்டு. நடுப்பக்க கட்டுரை படித்து குடிமைப்பணி தேர்வுக்குப் பெரும் உதவியாக இருந்தது. தமிழகத்தில் கீழடி அகழ்வராய்ச்சி மூலம் தமிழரின் 2,600 ஆண்டுகள் தொன்மை உலகுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமி-ழரின் தொன்மை 3,600 ஆண்-டுகள் பழைமையானது. சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்-பட்--டது.

எனவே இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்து தொடங்-குகிறது என்று தமிழக முதல்வர் பெருமிதத்-துடன் தெரிவித்தார். எனவே தமிழகத்தில் இனி தொல்லியல் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் காத்திருக்-கின்றன.

ஆண்டுதோறும் நடக்கும் ஆய்வுகள் மூலம் இனி நூற்-றாண்டுகள், ஆயிர-மாண்டு-கள் எனத் தமிழரின் பழைமையைத் தொடர்ந்து கண்ட-றிவோம். சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ் இலக்கியம் படித்து குடிமைப்பணிக்கு தேர்வா-கினார் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்க¬ எதிர்கொண்ட இவர் உலகம் முழுக்க சாதனைகளை படைத்-துள்ளார். எனவே இவரின் தமிழ் நெடுஞ்சாலை நூலைப் படிக்கும் இளைஞர்கள் மிகப்பெரிய சாத-னை புரிவர் என்றார் அவர்.

விழாவில் களம் அமைப்பின் துளி--தாசன் தலைமை தாங்கினார். செல்வம் முன்-னிலை வகித்தார். கவிஞர் நந்தலாலா, தமிழ் நாடு பாடநூல் கழகத்துணை இயக்குநர் சங்கர சரவணன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் வாழ்த்தினர். மதுரை எம்.பி. வெங்கடேசன், மத்திய மண்டல காவல் துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News