பைக்
டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி.

அசத்தல் அப்டேட்களுடன் புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. அறிமுகம்

Published On 2021-12-25 08:16 GMT   |   Update On 2021-12-25 08:16 GMT
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


டி.வி.எஸ். நிறுவனம் அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலின் விலை ரூ. 1.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாடலில் சற்றே அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் பெரிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் டி.வி.எஸ். ரேசிங் லோகோ, அலாய் வீல்களுக்கு மேட்ச் செய்யும் ரெட் நிற கிராப் ரெயில்கள் உள்ளன. 



இதன் ஹார்டுவேர் அம்சங்கள் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் உள்ளன.

புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. எடிஷன் மாடலில் 164.9 சி.சி. சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.93 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிரிவில் அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. இருக்கிறது.
Tags:    

Similar News