செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-15 11:22 GMT   |   Update On 2021-06-15 11:22 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 443 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 130 ஆக அதிகரித்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 313 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆயிரத்து 443 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று 691 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 36 ஆயிரத்து 149 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 357 பேர் இறந்து விட்ட நிலையில், 3 ஆயிரத்து 937 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்தாலும், பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News