உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

முத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல்

Published On 2022-05-07 09:08 GMT   |   Update On 2022-05-07 09:08 GMT
பெரம்பலூர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் முத்திைரயிடப்படாமல் பயன்படுத்தி வந்த தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் சந்தை, காய்கறி மார்க்கெட், சாலையோர வணிகர்கள் ஆகியோர் பயன்படுத்திய முத்திரையிடாத எடையளவுகள், தராசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பெரம்பலூரில் காய்கறி சந்தை மற்றும் சாலையோர வணிகர்களிடம் உரிய முத்திரையிடாத எடையளவுகள், மின்னணு தராசுகள், எடைகற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி உரிய முத்திரையிடாமல் எடையளவுகள் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தும் வணிகர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே வியபாரிகள் அனைவரும் உரிய காலத்தில் தங்களது எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும் என  தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News