ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஹயக்கிரீவர்.

தேவநாதசாமி கோவிலில் ஹயக்ரீவர் உற்சவம் தொடங்கியது

Published On 2019-09-04 03:25 GMT   |   Update On 2019-09-04 03:25 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஹயக்ரீவர் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள அவுசதகிரி மலையில் பிரசித்தி பெற்ற கல்விக்கு உகந்த ஹயக்கிரீவர் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி என்று பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இங்கு ஆண்டு தோறும் ஹயக்ரீவர் உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி ஹயக்ரீவர் உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உற்சவத்தில் தினசரி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சாற்றுமுறை மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News