செய்திகள்
வைரல் புகைப்படம்

கிரிக்கெட் வெற்றியை கொண்டாட துப்பாக்கி சூடு மட்டுமல்ல, குண்டுவெடிப்பும் நடத்தியதா பாகிஸ்தான்?

Published On 2021-10-28 09:18 GMT   |   Update On 2021-10-28 11:25 GMT
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான வெற்றியை பாகிஸ்தான் இப்படி கொண்டாடியது என கூறி வைரலாகும் பகீர் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி எப்போதும் இரு நாட்டு ரசிகர்களின் உணர்ச்சிகளால் நிறைந்து இருக்கும். அக்டோபர் 24 ஆம் தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 

இதையொட்டி பாகிஸ்தான் முழுக்க கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், குண்டுவெடிப்பு போன்ற காட்சி அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்நாட்டின் சில பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதுபற்றிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

உண்மையில் சமீபத்திய கிரிக்கெட் வெற்றியை கொண்டாட பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சிலர் காயமுற்றனர். எனினும், குண்டு வெடிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட் போட்டி வெற்றியை குண்டுவெடிப்பு நடத்தி கொண்டாடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 
Tags:    

Similar News