செய்திகள்
காணிக்கை எண்ணியப்போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.72¾ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2020-10-14 04:11 GMT   |   Update On 2020-10-14 04:11 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.72 லட்சத்து 70 ஆயிரத்து 552 காணிக்கையாக வசூல் ஆனது. மேலும் 1¼ கிலோ தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் உண்டியலில் இருந்தது.
சமயபுரம்:

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் இரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி, நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

கோவில் இணை ஆணையர் அசோக்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் அரியலூர் உதவி ஆணையர் கருணாநிதி, திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி, கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் கண்காணிப்பாளர் நரசிம்மன் மற்றும் செயல் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில் ரூ.72 லட்சத்து 70 ஆயிரத்து 552 காணிக்கையாக வசூல் ஆனது. மேலும் 1¼ கிலோ தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் உண்டியலில் இருந்தது.
Tags:    

Similar News