செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா பரவலில் தமிழகம் 3-ஆம் இடம்: மத்திய அரசு

Published On 2021-05-11 11:36 GMT   |   Update On 2021-05-11 11:40 GMT
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்

இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமாக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000 க்கு கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி. ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் மாநிலங்களில் கொரோனா குறைந்து வருகிறது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், ஓடிசா, பஞ்சாப், புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.

கடந்த 2 வாரங்களில் பெங்களூரு, சென்னை, ஏர்ணாகுளம், மலாப்புரத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News