செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா

Published On 2020-10-14 22:09 GMT   |   Update On 2020-10-14 22:09 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 537 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

14 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 6 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த 30 வயது நபர், சூலக்கரை இ.பி. காலனியை சேர்ந்த 49 வயது நபர், மலைப்பட்டியை சேர்ந்த 23 வயது நபர், 51 வயது பெண், 67 மற்றும் 73 வயது மூதாட்டிகள், 18 வயது வாலிபர், அருப்புக்கோட்டை சிதம்பரபுரத்தை சேர்ந்த 14 பேர், பாலவநத்தம், டானாவிளக்கு, கோபாலாபுரம், ஆலடிப்பட்டி, அருப்புக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்த 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. அருப்புக்கோட்டை பகுதியில் சிதம்பரபுரத்தில் பாதிப்பு ஏற்பட்டவுடன், கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் தாமதமான நடவடிக்கையினால் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மலைப்பட்டியிலும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் அரசு விதிமுறைப்படி பாதிப்பு ஏற்பட்டவுடன் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்காமல் தாமதப்படுத்துவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேலும் மருத்துவ பரிசோதனை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,705 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு குறைந்துள்ளதாக கருத வேண்டிய நிலை உள்ளது. உண்மை நிலவரம் அறிய மருத்துவ பரிசோதனையை மாவட்டம் முழுவதும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News