இந்தியா
கோப்புப்படம்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 4,868 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-12 04:44 GMT   |   Update On 2022-01-12 13:49 GMT
ஒருபக்கம் கொரோனாவின் 3-வது அலை சுழன்று அடிக்கும் நிலையில், மறுபக்கம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில்  உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் கொரோனா 2-வது அலை உருவானது. தற்போது ஒமைக்ரான் வைரசால் 3-வது அலை உருவாகியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உச்சத்தை தொடும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே ஒமைக்ரான் தொற்றும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,461 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 4,868 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் தொற்றில் இருந்து 1805 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 645 பேர், டெல்லியில் 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News