லைஃப்ஸ்டைல்
சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம்

சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம்

Published On 2021-06-22 05:27 GMT   |   Update On 2021-06-22 05:27 GMT
காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம் செய்து சுவைக்கலாம். அதை மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்  

சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்,
வேர்க்கடலை - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்),
உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.

செய்முறை

அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு சற்று வதக்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள மாவில்  கொட்டி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

சத்தான சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார குழிப்பணியாரம் ரெடி.
Tags:    

Similar News