செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி வழக்கில் 7 பேர் கைது

Published On 2020-09-14 10:12 GMT   |   Update On 2020-09-14 10:12 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்ட மோசடி வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கியதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் முறைகேடாக பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 7.50 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட போலி பயனாளர்களிடமிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களாக 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வெங்கடேன், பழனிகுமார், புஷ்பராஜ், பாரி, பாலகிருஷ்ணன்,மாயவன், பிரகாஷ் ஆகிய 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்

Tags:    

Similar News