செய்திகள்
கைது

சூலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-06-30 10:14 GMT   |   Update On 2021-06-30 10:14 GMT
சூலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

சூலூர் அருகே கலங்கல் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்தது திருடிய வழக்கில் செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

சூலூர் அருகே கலங்களை அடுத்த காசி கவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையின் பின்புற சுவற்றை கடப்பாறையால் இடித்து உள்ளே சென்று ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக 4 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சூலூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே கண்ணம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் குமார் (40), சென்னிமலை கவுண்டர் வீதியைச் சேர்ந்தமகேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கண்ணம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த கமல சேகர்(45) என்பவனை கைது செய்யப்பட்டார். இவர் கலங்கள், காங்கேயம் பாளையம் மற்றும் சூலூர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து பணம் நகை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவருகிறது.

கமல சேகர் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சம்பந்தமாக மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News