தொழில்நுட்பம்
குவால்காம்

குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி பிராசஸர் அறிமுகம்

Published On 2021-01-06 07:25 GMT   |   Update On 2021-01-06 07:25 GMT
5ஜி வசதி கொண்ட முதல் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்ட முதல் 4 சீரிஸ் பிராசஸர் ஆகும். இது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த பிராசஸர் உருவாக்கப்பட்டு வருவதாக குவால்காம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 460 பிராசஸரின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.



புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் மில்லிமீட்டர் வேவ் மற்றும் சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வொர்க்குகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்ட முதற்கட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸரை சந்தையில் கொண்டுவர ஹெசஎம்டி குளோபல், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களுடன் குவால்காம் இணைந்து பணியாற்றி வருகிறது.

சமீபத்தில் அறிமுகமான ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் போன்று இல்லாமல் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் 8 நானோமீட்டர் வழிமுறையில் உருவாகி இருக்கிறது.
Tags:    

Similar News