செய்திகள்
கோப்புபடம்.

டிசம்பர் 1-ந்தேதி முதல் அனைத்து ஜாப் ஒர்க் கட்டணங்களும் 25 சதவீதம் உயர்கிறது

Published On 2021-11-21 10:12 GMT   |   Update On 2021-11-21 10:12 GMT
உள்நாட்டு ஏற்றுமதி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் ஜாப்ஒர்க் கட்டணங்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஜாப்ஒர்க் சங்கங்களின் கூட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நிட்மா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கான அனைத்து மூலப்பொருள்களின் விலையும், செவினங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆகவே ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியை சார்ந்த அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களும் வரும் டிசம்பர் 1-ந்தேதி முதல் தற்போது பெறும் கட்டணங்களில் இருந்து 25 சதவீதம் உயர்த்திகொள்ளலாம். உள்நாட்டு ஏற்றுமதி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் ஜாப்ஒர்க் கட்டணங்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிட்மா தலைவர் ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்திராஜன், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் என்.பி.சிவானந்தன், டெக்பா தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த், திருப்பூர் ரைஸிங் அசோசியேஷன் தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி, திருப்பூர்காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன், ரோட்டரி ஸ்க்ரீன் பிரிண்டிங் அசோசியேஷன் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News