உள்ளூர் செய்திகள்
நகைகள்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்- 6 வாரங்களுக்கு அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது

Published On 2021-12-15 14:35 GMT   |   Update On 2021-12-15 14:35 GMT
அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் கூறி உள்ளது.
சென்னை:

கோவில்களில் காணிக்கையாக வந்துள்ள நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், கோவில்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நகைகள் கணக்கெடுப்பு, அறங்காவலர்கள் நியமனம் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News