செய்திகள்
ரமேஷ் பொக்ரியால்

14.37 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

Published On 2020-09-14 14:21 GMT   |   Update On 2020-09-14 14:21 GMT
15.97 லட்சம் மாணவ- மாணவிகள் பதிவு செய்திருந்த நிலையில் 14.37 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாநில அரசுகள் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தனர். மாணவர்கள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வு எழுதினர்.

தேர்வு நடைபெறுவதற்கு முன் மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் இந்த கொரோனா நேரத்தில் மாணவர்களின் உயிரை பணயம் வைத்து தேர்வு நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.

மத்திய அரசு, மத்திய தேர்வு முகமை, உச்சநீதிமன்றம் ஆகியவற்றால் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று தேர்வு நடத்தப்பட்டன.

‘‘மொத்தம் 15.97 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இதில் 14.37 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு நடத்துவது குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், மாணவ - மாணவிகள் ஒரு வருடத்தை வீணடிக்க விரும்பமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News