செய்திகள்
கொரிய எல்லையில் ராஜ்நாத் சிங்

கொரிய எல்லையை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்

Published On 2019-09-07 14:37 GMT   |   Update On 2019-09-07 14:37 GMT
தென்கொரிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாந் சிங் வடகொரியா எல்லையை பார்வையிட்டார்.
சியோல்:

இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் லீ நக்-யோனை ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, ராணுவ கட்டமைப்பை வலுபடுத்துதல் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.



இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளான இன்று ராஜ்நாத் சிங் வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளின் முக்கிய எல்லையான பான்முஞ்ஜோம் பகுதியை பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து, 2018-ம் ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் இணைந்து நடவு செய்த மரத்தையும் பார்வையிட்டார்.
Tags:    

Similar News