செய்திகள்
கவர்னராக ஸ்ரீதரன்பிள்ளை பதவியேற்ற காட்சி.

ஸ்ரீதரன்பிள்ளை மிசோரம் கவர்னராக பதவி ஏற்பு

Published On 2019-11-06 05:23 GMT   |   Update On 2019-11-06 05:23 GMT
கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்த ஸ்ரீதரன்பிள்ளை மிசோரம் கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அஜய்லம்பா பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன்பிள்ளை. இவர் அந்த பதவியில் இருந்தபோது சபரிமலை போராட்டத்தை முன்நின்று நடத்தியவர். பாராளுமன்ற தேர்தலின்போதும் பாரதிய ஜனதாவுக்காக தீவிரமாக களப்பணியாற்றியவர். இந்த நிலையில் அவர் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதரன்பிள்ளை மிசோரம் கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அஜய்லம்பா பதவிபிரமாணம் செய்துவைத்தார். பதவி ஏற்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்ரீதரன்பிள்ளை, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தருவேன் என்றார்.
Tags:    

Similar News