செய்திகள்
வைரல் வீடியோ சார்ந்த செய்தி தொகுப்பு ஸ்கிரீன்ஷாட்

சிறுமி கொடூரமாக தாக்கப்படும் வைரல் வீடியோ இந்தியாவை சேர்ந்ததா?

Published On 2019-11-19 06:03 GMT   |   Update On 2019-11-19 06:03 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் சிறுமியை பெண்மணி ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



சிறுமி ஒருவரை பெண்மணி கொடூரமாக தாக்கும் பகீர் காட்சிகள் அடங்கிய மூன்று நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் சிறுமியை தாக்கும் பெண்மணியை கண்டறிந்து, உடனே அவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தள வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் எடுக்கப்பட்டிருப்பதாக பலர் பதிவிட்டிருந்தனர். 

வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடியபோது, அது அமெரிக்காவை சேர்ந்த சமூக வலைத்தள அக்கவுண்ட்களில்  வைரலானது தெரியவந்துள்ளது. டெக்சாஸ் பகுதியின் கார்பஸ் க்ரிஸ்டி காவல் துறை வைரல் வீடியோவில் உள்ள நபர் பற்றிய விசாரணையை துவங்கியது.



மேலும் வைரல் வீடியோ பற்றிய தகவல் அறிந்தவர்கள் காவல் துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் காவல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. காவல் துறை சார்பிலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. பின் இந்த வீடியோ மெக்சிகோவில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கார்பஸ் க்ரிஸ்டி காவல் துறை தெரிவித்தது.

வீடியோ பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உண்மையில் இது எங்கு எடுக்கப்பட்டது என உறுதி செய்யப்படவில்லை. இதனால் இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதில்லை என உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News