செய்திகள்
சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2021-04-05 15:17 GMT   |   Update On 2021-04-05 15:17 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் பங்குதந்தை ஜோசப் லாசர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையிலும், கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் கெவின் தலைமையிலும், சூரமங்கலம் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை அருளப்பன் தலைமையிலும், ஆண்டிப்பட்டி அப்போஸ்தல விசுவாச எழுப்புதல் சபையில் போதகர் காட்வின் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதேபோல், சேலம் செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், சூரமங்கலம் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Tags:    

Similar News