செய்திகள்
சீன ராணுவ வீரர்கள்

ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதம் உயர்த்தியது சீனா

Published On 2021-03-05 16:44 GMT   |   Update On 2021-03-05 16:44 GMT
சீனா தனது நாட்டு ராணுவத்திற்கு பட்ஜெட்டில் 209 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
பீஜிங்:

உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ராணுவத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடற்படையில் புதிதாக போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. 

ராணுவத்தை வலிமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து  உயர்த்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் 6.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 209 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள், எந்தவொரு நாட்டையும் குறிவைக்கவோ அச்சுறுத்தவோ அல்ல என்று பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News