செய்திகள்
மு.க. ஸ்டாலின், மோடி

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி

Published On 2021-06-07 14:47 GMT   |   Update On 2021-06-07 14:47 GMT
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பாரத பிரதமர் மோடி இன்று இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்யும். அவற்றை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும். 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வருகிற ஜூன் 21-ந்தேதி முதல் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மாநில அரசுகள் நன்றி தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘‘மத்திய அரசு நாட்டின் மொத்த உற்பத்தி கொரோனா தடுப்பூசியில் இருந்து 75 சதவீதத்தை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய கொள்கையில் இருந்து பிரதமர் மோடி பின்வாங்கியதற்கு எனது பாராட்டு.

பிரதமர் மோடி பலமுறை சுகாதாரம் மாநிலத்தை சார்ந்தது என்று வலியுறுத்தியுள்ளார். பதிவு முறை உள்ளிட்டவைகளை மாநிலங்களிடம் கொடுத்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News