ஆன்மிகம்
சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலில் வருசாபிஷேகம்

சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலில் வருசாபிஷேகம்

Published On 2020-09-05 03:53 GMT   |   Update On 2020-09-05 03:53 GMT
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கசவம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 504 சங்கு பூஜை, 54 கலசபூஜை, யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.

காலை 9 மணி அளவில் கோவில் கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பேச்சி, பிரம்மசக்தி, சுடலைமாடசாமி, புதியவன் சுவாமி, முண்டசாமிக்கு புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது.

மதியம் சுடலைமாடசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கசவம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News