உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை

Published On 2022-01-19 10:47 GMT   |   Update On 2022-01-19 10:47 GMT
5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி மாதிரிகள் எடுக்க வேண்டும்.
கோவை:

கோவை மாவட்டத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு  எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.  இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது. 

அரசு கலைக் கல்லூரியில் செயல்படும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்படுகிறது. 

இந்நிலையில், இங்கு வரும் நோயாளிகளிடம் தொடர்ந்து 5 நாள்கள் காய்ச்சல் உள்பட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மற்ற நோயாளிகளுக்கு பாராஸிட்டமல் மாத்திரைகள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அச்சத்துடன் கொரோனா பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பவதால் நோயாளிகள் அச்சத்துடன் சென்று தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். 

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:

 அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 250 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் தேவையில்லாமல் அடிக்கடி வந்து  பரிசோதனை  செய்து கொள்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் உடனிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வற்புறுத்துகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடைய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் போது மானது. அனை வருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேபோல் சாதாரண காய்ச்சல், சளி போன்றவற்றுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. 

கொரோனா பரிசோதனை உபகர ணங்களை தேவையின்றி பயன்படுத்துவதல் தேவைப்படும் சம யங்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் சேகரிப்பதில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   

 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொரோனா பரிசோதனை மையத்தில் தெளிவாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News